Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ... செப் 15 ம் தேதி முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்கிறார்

1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ... செப் 15 ம் தேதி முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்கிறார்

By: vaithegi Wed, 07 Sept 2022 8:29:30 PM

1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்  ...  செப் 15 ம் தேதி முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்கிறார்

சென்னை: மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டில் முதல்வர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதை அடுத்து அதில் ஒன்று தான் காலை சிற்றுண்டி திட்டம். இதன் மூலம் அரசு பள்ளியில் 1 – 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியிலே காலை உணவு அளிக்கப்படும் என அரசு தெரிவித்தது.

இதையடுத்து முதல் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தபட்டது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது மதுரை மாநகராட்சியிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

mukha stalin,snack , முக ஸ்டாலின் ,சிற்றுண்டி

இதனைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும் திமுக தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் மதுரையில் துவங்கி வைக்க உள்ளார்.

மேலும் இந்த திட்டம் தொலை தூரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் பள்ளிக்கு வரும் மாணவர்களை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உப்புமா, கிச்சடி, பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 14 மாநகராட்சிகளிலும், 23 நகராட்சிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :