Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிரம்பியது முல்லை பெரியாறு அணை... இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பியது முல்லை பெரியாறு அணை... இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:08:24 PM

நிரம்பியது முல்லை பெரியாறு அணை... இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீரினால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன.முல்லை பெரியார் அணை கேரளாவில் அமைந்திருந்தாலும், அனைத்து பராமரிப்பு பணிகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது.

kerala,mullaperiyar dam,tamil nadu, ,கேரளா, தமிழ்நாடு, முல்லைப் பெரியாறு அணை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயரத் தொடங்கியது. நீர்மட்டம் 140 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.


இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும்.

Tags :
|