Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி

5 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி

By: Nagaraj Sat, 19 Sept 2020 9:01:52 PM

5 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி

ஆரவாரமாக தொலைக்காட்சி முன்பு தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது.

3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பு தவமாய் தவமிருந்து ஆர்வமாக பார்த்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்.

mumbai indians,chennai team,wickets,ipl ,மும்பை இந்தியன், சென்னை அணி, விக்கெட்டுகள், ஐபிஎல்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு ஆட்டத்தை தொடங்கியது.

போட்டி தொடங்கியவுடன் முதல் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவரில் 86 ரன்களில் இரண்டு விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து அதிரடியாக பந்து வீசி வரும் சென்னை அணியின் வேகத்தில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து தவித்து வருகிறது.

Tags :