Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய பணியாளர்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகம் அழைப்பு

பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய பணியாளர்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகம் அழைப்பு

By: Monisha Sat, 30 May 2020 09:49:53 AM

பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய பணியாளர்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகம் அழைப்பு

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக சுமார் 300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் HFC & HC ஆகியவை ஜூன் 2020-க்குள்ளாக காலாவதி ஆகின்றன.

எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால் MTC (W), FC பிரிவுகள் மற்றும் RC பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50 சதவீதம் அடிப்படையில்) உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

chennai municipal transport corporation,bus,corona virus,staff ,சென்னை மாநகர் போக்குவரத்து கழகம்,பேருந்து,கொரோனா வைரஸ்,பணியாளர்கள்

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:-

பணிக்கு வரும் பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கை கையுறைகள் கட்டாயம் அணிய வேண்டும்.

கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும்.

கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

தொழிற்கூடங்கள, பணி செய்யும் இடங்கள், கேண்டீன், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேணடும்.

பணியாளர்களுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு மாநகர் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

Tags :
|