Advertisement

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கினார்

By: vaithegi Fri, 28 Oct 2022 2:19:10 PM

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கினார்

சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் அதிநவீன தொழில் நுட்ப களத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகித்து கொண்டு வருகிறார். SpaceX என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் மஸ்க் நடத்தி கொண்டு வருகிறார். வருங்காலத்தில் விண்வெளி போக்குவரத்திலும் முக்கிய இடத்தை மஸ்கின் நிறுவனம் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனை அடுத்து இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பிருந்து சமூக வலைதள ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட ஒரு விவகாரம் காரணமாக இந்த முடிவை மஸ்க் கைவிட நினைத்தார்.

twitter,elon musk ,ட்விட்டர் ,எலான் மஸ்க்

ஆனால், ட்விட்டர் நிறுவனம் இதற்காக இவரின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதையடுத்து இந்நிலையில், வழக்கின் முடிவில் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் நேற்று ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கிவிட்டார்.

இதன் பிறகு, அதிரடியாக டிவீட்டர் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்த பராக் அகர்வால், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் அதன் சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் ஆகியோரை பணியில் இருந்து நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் மஸ்க் செய்த இந்த வேலை இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Tags :