Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மாநில அளவில் 12ம் வகுப்பு தேர்வில் இஸ்லாமிய மாணவி முதலிடம்

கர்நாடக மாநில அளவில் 12ம் வகுப்பு தேர்வில் இஸ்லாமிய மாணவி முதலிடம்

By: Nagaraj Wed, 26 Apr 2023 1:00:56 PM

கர்நாடக மாநில அளவில் 12ம் வகுப்பு தேர்வில் இஸ்லாமிய மாணவி முதலிடம்

கர்நாடகா: மாநில அளவில் மாணவி முதலிடம்... 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கலைப்பிரிவைச் சேர்ந்த தபசம் ஷேக் என்ற இஸ்லாமிய மாணவி 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் கடந்த ஆண்டு ஹிஜாப் மற்றும் காவித் துண்டு விவகாரம் பெரிதாக வெடித்தது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதனால் ஏராளமான மாணவிகள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளைப் புறக்கணித்தனர். மேலும் இந்த விவகாரம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றதோடு மட்டுமில்லாமல், நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

student,first,state level,first time,hijab,college ,மாணவி, முதலிடம், மாநில அளவில், முதன்முறை, ஹிஜாப், கல்லூரி

ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கலைப்பிரிவைச் சேர்ந்த தபசம் ஷேக் என்ற இஸ்லாமிய மாணவி 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

12-ம் வகுப்பு தேர்வுக்கு சமமான PUC-II (Second Pre-University) எனப்படும் இந்தத் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி தபசம் ஷேக் கூறுகையில், ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து என்னால் கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை. அதேநேரத்தில் ஹிஜாப்பை அகற்றவும் தயக்கம் ஏற்பட்டது. எனினும், அது அப்போதைய சட்டம் என்பதால், அதனை பின்பற்ற வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதன்முறையாக ஹிஜாப் அணியாமல் எனது கல்லூரிக்கு நான் சென்றேன். சங்கடமாக நான் இருப்பதை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்” என்றும் தபசம் ஷேக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|