Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முத்துராஜ் நேற்றிரவு கைது

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முத்துராஜ் நேற்றிரவு கைது

By: Nagaraj Sat, 04 July 2020 10:07:51 AM

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முத்துராஜ் நேற்றிரவு கைது

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த சாத்தான்குளம் காவலர் முத்துராஜை நேற்றிரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறிதாகவும், சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது. தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம்.

muthuraj,arrested ,முத்துராஜ், கைது, நீதிபதி உத்தரவு, நீதிமன்ற காவல், சிபிசிஐடி போலீசார்

போலீஸ்காரர் முத்துராஜை தொடர்ந்து தேடி வருகிறோம். அவரையும் பிடித்து விடுவோம். நாங்கள் பிடித்து வைத்ததாக கூறுவது கற்பனை. அவ்வாறு பிடித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை என்றார்.

இதற்கிடையே முத்துராஜை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதனையடுத்து இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமை காவலர் முத்துராஜூக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து முத்துராஜை ஜூலை 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

Tags :