Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என் குப்பை.. என் பொறுப்பு..பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

என் குப்பை.. என் பொறுப்பு..பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

By: Monisha Fri, 15 July 2022 7:42:52 PM

என் குப்பை.. என் பொறுப்பு..பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள நகர்பகுதியில் தூய்மை காண மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு விழாவினை கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு பள்ளிகளில் நடத்தி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித் தனியாக பிரித்து தருவது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றிய கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

my garbage,my responsibility,students,plastic ,என் குப்பை,என் பொறுப்பு,பிளாஸ்டிக்,
 கழிவு,

கம்பம் உத்தமபுரம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நகராட்சி அதிகாரிகள் பேசியதுடன் குப்பை கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.


மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசு பொருட்களையும் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழங்கினார்.

Tags :