Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என் குப்பை.. என் பொறுப்பு.. தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி- வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ்..

என் குப்பை.. என் பொறுப்பு.. தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி- வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ்..

By: Monisha Sat, 16 July 2022 6:31:27 PM

என் குப்பை.. என் பொறுப்பு.. தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி- வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ்..

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் பாலிதீன் பைகளால் அதிகளவு சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.இதனை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் வனத்துறையினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனுஷ்கோடி பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் புதுரோடு பகுதியில் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாலிதீன் பைகள் வைத்திருந்தால் அவற்றை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக மஞ்சள் பைகளை வழங்கி வருகிறது வனத்துறை.

my garbage,my responsibility,speech,certificate ,என் குப்பை, என் பொறுப்பு,போட்டி,
சான்றிதழ்,

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு மண்வளம் மற்றும் கடல்வளம், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு பாலிதீன் பொருட்களை முற்றிலும் அழிக்கும் நோக்கில், மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் அடுத்தப்படியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர் மாணவியர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றத் தலைவர், நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

Tags :
|