Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் .. ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் .. ஆளுநர் ஆர்.என்.ரவி

By: vaithegi Sat, 31 Dec 2022 6:44:48 PM

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்    ..  ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிப்பு .. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:- எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வகுரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோர்ப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நம் நாடு 2023 புத்தாண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது.

governor,new year ,ஆளுநர் ,புத்தாண்டு

இதனை அடுத்து நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். சில நாடுகளில் உயர்ந்து வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு நாம் விழிப்புடன் இருந்து கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

புத்தாண்டு 2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியை கொண்டுவரட்டும் என அதில் கூறியுள்ளார்.

Tags :