Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னது அணுகுண்டு தாக்குதலா? இஸ்ரேல் அமைச்சர் பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி

என்னது அணுகுண்டு தாக்குதலா? இஸ்ரேல் அமைச்சர் பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி

By: Nagaraj Tue, 07 Nov 2023 3:57:57 PM

என்னது அணுகுண்டு தாக்குதலா? இஸ்ரேல் அமைச்சர் பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி

இஸ்ரேல்: காசாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் உண்டு. அதுவும் நடக்கலாம்’’ என்று இஸ்ரேல் அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையையும், உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளையும் எழுப்பி உள்ளது.

இஸ்ரேலின் ஜெருசலேயம் விவகாரம் மற்றும் பாரம்பரிய துறை அமைச்சரான வலதுசாரி கட்சி ஓட்ஸ்மா யெஹுதிட்டை சேர்ந்த அமிசாய் எலியாகு அளித்த பேட்டியில், ‘‘காசாவில் போராளிகள் அல்லாத யாரும் இல்லை. எனவே சர்வதேச சட்டத்தின்படி அங்கு பாதுகாக்க வேண்டியவர்கள் என யாரும் கிடையாது.

attack,gaza,israel,minister,nuclear bomb,panic,speech, ,அணுகுண்டு, அமைச்சர், இஸ்ரேல், காசா, தாக்குதல், பீதி, பேச்சு

எனவே காசாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் உண்டு. அதுவும் நடக்கலாம்’’ என்றார். அவரது இந்த பேச்சு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘இது நிஜத்தில் இருந்து மாறுபட்ட கருத்து. இஸ்ரேல் ராணுவப் படை சர்வதேச சட்டத்தின் உயர்தரத்தை பின்பற்றி வருகிறது. போரில் ஈடுபடாத மக்களை நாங்கள் காயப்படுத்தவில்லை. இதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி போரில் வெற்றி பெறுவோம்’’ என்றார். மேலும், அமைச்சரவை மற்றும் அரசு கூட்டங்களில் பங்கேற்க அமைச்சர் அமிசாய்க்கு நெதன்யாகு காலவரையற்ற தடை விதித்துள்ளார்.

Tags :
|
|
|
|
|