Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் எனது கட்சி வெற்றி பெறும் - ஜோ பைடன் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் எனது கட்சி வெற்றி பெறும் - ஜோ பைடன் நம்பிக்கை

By: Karunakaran Wed, 04 Nov 2020 3:16:09 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் எனது கட்சி வெற்றி பெறும் - ஜோ பைடன் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி நிலவரம் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. வாக்குப்பதிவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் முடிவுகள் அறிவிக்கும் நேரமும் மாறுபடுகிறது. மெஜாரிட்டிக்கு 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி 237 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார்.

210 வாக்குகளுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவான அளவே உள்ளது. இருவரும் கிட்டத்தட்ட சம அளவிலான மாநிலங்களில் வென்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றினார்.

my party,us presidential election,joe biden,trump ,கட்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், ஜோ பிடன், டிரம்ப்

ஜோ பைடன் உரையாற்றுகையில், ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறம். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், இனி எதிர்க்கட்சிகள் இனி ஓட்டுபோட்டு வெற்றி பெற முடியாது. இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். ஆனால் டிரம்பின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Tags :