Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குருஹ லட்சுமி திட்டத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனும் சேர்ப்பு

குருஹ லட்சுமி திட்டத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனும் சேர்ப்பு

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:09:41 PM

குருஹ லட்சுமி திட்டத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனும் சேர்ப்பு

கர்நாடகா: மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லட்சுமி திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியாக ‘குருஹ லட்சுமி திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்த காங்கிரஸ் இந்தத் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது.

இந்த திட்டம் காலதாமதமாக தொடங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அதை செயல்படுத்தத் தொடங்கியது கர்நாடக அரசு. இந்தத் திட்டத்துக்காக மாதம் 2,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதன் மூலம் 1.2 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

amman,chamundeshwari,rs.2000,scholarship ,அம்மன், உதவித்தொகை, சாமுண்டீஸ்வரி, ரூ.2000

கர்நாடக மாநில மேலவை உறுப்பினரும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு துணைத் தலைவருமான தினேஷ் கூலிகவுடா, அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லட்சுமி திட்டத்தில் சேர்க்க வேண்டும், அவருக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஏற்ற துணை முதல்வர், சாமுண்டீஸ்வரி அம்மனையும் திட்டத்தில் சேர்த்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனும் பயனாளராகச் சேர்க்கப்பட்டு மாதம்தோறும் ரூ.2000 பெறுவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags :
|