Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

By: Monisha Tue, 13 Oct 2020 5:48:14 PM

நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார்

சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்டு , அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். உடனே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்யுடன் சோதனை நடத்தினர்.

actor dhanush,house,mysterious person,bomb,threat ,நடிகர் தனுஷ்,வீடு,மர்ம நபர்,வெடிகுண்டு,மிரட்டல்

அப்போது எந்த ஒரு தடயமும் கிடைக்காத நிலையில் அது புரளி என தெரிய வந்தது. மேலும் இன்று விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|