Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னியாவில் கடையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்… மக்கள் அச்சம்

கலிபோர்னியாவில் கடையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்… மக்கள் அச்சம்

By: Nagaraj Tue, 18 Apr 2023 8:56:12 PM

கலிபோர்னியாவில் கடையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்… மக்கள் அச்சம்

கலிபோர்னியா: மர்ம கும்பலின் திருட்டு... அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடை ஒன்றில் மர்ம கும்பல் நுழைந்து பொருட்களை திருடி சென்றது.

காம்ப்டன் நகரில் உள்ள அக்ரோ மினி மார்ட் என்ற கடையின் கதவை உடைத்த அந்த கும்பல், உள்ளே நுழைந்து அங்கிருந்த மதுபான பாட்டில்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளது.

mystery gang,robbery,people,fear,stress,cops ,மர்ம கும்பல், கொள்ளை, மக்கள், அச்சம், வலியுறுத்தல், போலீசார்

மர்ம கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோன்று மர்ம கும்பல் அடிக்கடி திருட்டில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|
|