Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு புறப்படும் இந்திய ராணுவ தளபதி நரவானே

3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு புறப்படும் இந்திய ராணுவ தளபதி நரவானே

By: Karunakaran Wed, 04 Nov 2020 08:56:42 AM

3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு புறப்படும் இந்திய ராணுவ தளபதி நரவானே

இந்தியா - நேபாளம் இடையே உரசல்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்திய ராணுவ தளபதி நரவானே 3 நாள் பயணமாக நேபாள நாட்டுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார். இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மீண்டும் முந்தைய இணக்கமான சூழலை கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது.

தனது நேபாள பயணத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோரை நரவானே சந்திப்பார் என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் நரவானே, நேபாள ராணுவ தலைமையகத்துக்கு செல்வார்.

naravane,indian army commander,nepal,trip ,நாரவனே, இந்திய ராணுவ தளபதி, நேபாளம், பயணம்

நேபாள ராணுவ வீரர்கள் கல்லூரியில் இளம் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றுவார். அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ணசந்திர தாப்பா அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார். கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரிய வழக்கப்படி, நரவானேவுக்கு ‘நேபாள ராணுவ தளபதி’ என்ற கவுரவ பதவியை ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வியாழக்கிழமை வழங்குவார். பிரதமர் சர்மா ஒலியை நரவானே வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுவார்.

இந்தியா- நேபாள நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாட்டு எல்லையை திறன்பட நிர்வகிப்பது குறித்தும் தளபதி தாப்பாவுடன் நரவானே விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என கருதப்படுகிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து கடந்த மே மாதத்தில் நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு முதல் உயர்மட்ட பயணமாக நரவானே செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|