Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நரேந்திர மோடி மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பு

ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நரேந்திர மோடி மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பு

By: vaithegi Fri, 19 Aug 2022 12:08:00 PM

ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நரேந்திர மோடி மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  தெரிவிப்பு

இந்தியா : கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து இதுபற்றி ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமியின் இனிய நல்வாழ்த்துக்கள். கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் கல்வியை வழங்கும் பண்புகளை நாம் பெறலாம்.

narendra modi conveys his heartfelt greetings to all the people of the country on the auspicious occasion of janmashtami ,நரேந்திர மோடி,நல்வாழ்த்துக்கள்  ,ஜென்மாஷ்டமி

இந்த புனித திருவிழா அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்க விரும்புகிறேன். எண்ணம், சொல் மற்றும் செயலால் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிப்போம்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த பக்தி மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். ஸ்ரீ கிருஷ்ணா வாழ்க" என குறிப்பிட்டிருந்தார்.

Tags :