Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2024-ம் ஆண்டு மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டம்

2024-ம் ஆண்டு மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டம்

By: Karunakaran Tue, 22 Sept 2020 2:42:00 PM

2024-ம் ஆண்டு மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்கா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முதலாக நிலவுக்கு மனிதனை அனுப்பியது.அப்பல்லோ விண்கலம் மூலம் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதன்முதலில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் அப்பல்லோ விண்கலம் மூலம் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நாசா கொண்டாடியது.

தற்போது, நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிடப்பட்டு இருக்கிறது.

nasa,astronauts,moon,2024 ,நாசா, விண்வெளி வீரர்கள், சந்திரன், 2024

நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதில், 2 விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்களில் ஒரு பெண் இடம்பெறுவார்.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2021-25-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். வருகிற 2024-ம் ஆண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
|
|