Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியாலவ் இயங்கும் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டம்

செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியாலவ் இயங்கும் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டம்

By: Nagaraj Fri, 28 July 2023 8:34:08 PM

செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியாலவ் இயங்கும் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டம்

அமெரிக்கா: செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் நேரத்தைக் குறைக்கும் வகையில் அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைப் பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைச் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு 30 கோடி மைல் பயணம் செய்ய ஏழு மாதங்கள் ஆகின்றன. ஆனால் அணுசக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் இந்த நாட்களைக் குறைக்கலாம் என நாசா திட்டமிட்டுள்ளது.

nasa,nuclear power,space shuttle,waste of time,electric propulsion ,நாசா, அணுசக்தி, விண்கலம், கால விரயம், மின்சார உந்து சக்தி

இதன் முன்னோடியாக 2025ன் பிற்பகுதியில் அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணு சக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் காலவிரயம் எந்த அளவிற்கு மிச்சமாகும் என தெரியாவிட்டாலும், மின்சார உந்துசக்தியை விட சுமார் 10 ஆயிரம் மடங்கு அதிக உந்துதலை வழங்கும் என எதிர்பார்ப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Tags :
|