Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திராயன் -3 வெற்றிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா பாராட்டு

சந்திராயன் -3 வெற்றிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா பாராட்டு

By: Nagaraj Thu, 24 Aug 2023 6:42:22 PM

சந்திராயன் -3 வெற்றிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா பாராட்டு

வாஷிங்டன்: நாசா பாராட்டு... சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

pride,india,isro,nasa,south pole,greetings ,பெருமை, இந்தியா, இஸ்ரோ, நாசா, தென்துருவம், வாழ்த்துக்கள்

மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இதையடுத்து இந்தியாவிற்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறது. அந்த வகையில், 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|
|
|