Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்து நாசா விஞ்ஞானிகள் வெற்றி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்து நாசா விஞ்ஞானிகள் வெற்றி

By: Karunakaran Sun, 06 Dec 2020 1:55:50 PM

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்து நாசா விஞ்ஞானிகள் வெற்றி

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நிறுவியுள்ளன. பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் பூமியில் இருந்து உணவை கொண்டு சென்றாலும் அதை நீண்ட நாட்களுக்கு உண்ண முடியாது.

இதனால் விண்வெளி வீரர்கள் வைட்டமின் சத்துக்கள் உள்ள மாத்திரைகளையே உணவாக சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் புவி ஈர்ப்பு விசை சிறிதும் இல்லாத விண்வெளி நிலையத்தில் காய்கறி செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விண்வெளி வீரர்களுக்கு வழங்குவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

nasa scientists,harvest,radishes,international space station ,நாசா விஞ்ஞானிகள், அறுவடை, முள்ளங்கி, சர்வதேச விண்வெளி நிலையம்

இதற்காக குளிர்சாதன பெட்டி போன்று இயந்திரத்தை உருவாக்கி, செடிகள் வளருவதற்கு ஆக்சிஜன் மற்றும் செயற்கை சூரிய ஒளியை அளிக்கும் கருவி ஆகியவற்றை இணைத்தனர். அந்த இயந்திரத்துடன் பூமியில் உள்ள மண், உரம், சில செடி வகைகள் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் எடுத்துக்கொண்டு கடந்த மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பின்னர் செடிகளை இயந்திரத்துக்குள் வைத்து தண்ணீர் ஊற்றி விஞ்ஞானிகள் பராமரித்தனர்.

இதில் பல செடிகள் பாதியிலேயே அழுகிவிட முள்ளங்கி செடி மட்டும் 27 நாட்களுக்குள் முழுவதுமாக வளர்ந்தது. இதையடுத்து அந்த முள்ளங்கி செடியை விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் அறுவடை செய்தார். இந்த வீடியோவை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விண்வெளியில் காய்கறியை பயிரிட்டு அறுவடை செய்வது இதுவே முதல் முறை.

Tags :