Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை படம் பிடித்த நாசா வீரர்

பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை படம் பிடித்த நாசா வீரர்

By: Nagaraj Wed, 24 June 2020 11:48:06 AM

பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை படம் பிடித்த நாசா வீரர்

பூமியின் மீது விழுந்த நிலவின் நிழல்... சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த சூரிய கிரஹணத்தின்போது, பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை, விண்வெளி வீரர் ஒருவர், படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரிய கிரஹணம்ஏற்படுகிறது.கடந்த, 21ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசேஷ கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கியிலும் கண்டு ரசித்தனர்.

moon,shadow,nasa player,photo,fire ring,research center ,
நிலவு, நிழல், நாசா வீரர், புகைப்படம், நெருப்பு வளையம், ஆராய்ச்சி மையம்

பூமியிலிருந்து சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது. அதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது தென்பட்டது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர் படம் பிடித்து, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.

பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக விளக்குகிறது.

Tags :
|
|
|