Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஜூலை 17ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (NEET) நடைபெறும் ..தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்தியாவில் ஜூலை 17ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (NEET) நடைபெறும் ..தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 4:46:52 PM

இந்தியாவில்  ஜூலை 17ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (NEET)  நடைபெறும் ..தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்தியா: இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

12 ம் மதிப்பெண்கள் வெளியான பிறகு இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் தேர்வானது ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெற்றது. இதனால் மற்ற மாநில மாணவர்கள்பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதன் பிறகு அனைத்து மானவர்களையும் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட சேர்க்கப்பட்டு தற்போது தேர்வு 13 மொழிகளில் நடந்து வருகிறது.

entrance exam,need exam ,நுழைவுத்தேர்வு ,நீட் தேர்வு

2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. ஏப்ரல் 2ம் தேதி முதல் மாணவர்கள் இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.மேலும் மே15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 17ம் தேதி இளங்கலை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வை ஒத்தி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. இதற்கு மத்தியில் அறிவித்தபடி ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் NEET – UG தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. NEET – UG தேர்வை எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளி வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :