Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியீடு

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியீடு

By: vaithegi Tue, 12 July 2022 6:33:43 PM

நீட் தேர்வு  ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை  வெளியீடு

தமிழகம்: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பல இடங்களில் இருந்து கோரிக்கை வந்தாலும் அரசு அது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு குறைவான நாட்களே இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான நுழைவு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது.

neet exam,admit card ,நீட் தேர்வு,நுழைவு சீட்

இத்தேர்வுக்கு மே மாதம் 20 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இதுவரை 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் தேர்வுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை தரப்பு வெளியிட்டுள்ளது.

அதன் படி தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் இன்று காலை 11.30 மணி முதல் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறவுள்ளது .

Tags :