Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியீடு

இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியீடு

By: vaithegi Tue, 10 Oct 2023 11:43:56 AM

இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியீடு

இந்தியா: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. எனவே அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

national examinations agency,junior neet exam , தேசிய தேர்வுகள் முகமை,இளநிலை நீட் தேர்வு

நீட் தேர்வில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இந்த நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Tags :