Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை.. சோனியா காந்தி நேரில் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை.. சோனியா காந்தி நேரில் ஆஜர்

By: vaithegi Tue, 26 July 2022 12:53:46 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை.. சோனியா காந்தி நேரில் ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல்காந்தி விசாரணை நடத்தி கொண்டு வருகிறது. இதை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி சோனியா காந்தி ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு 26-ம் தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

sonia gandhi,national herald ,சோனியா காந்தி ,நேஷனல் ஹெரால்டு

இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் 2-வது முறையாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதேவேளை, சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்த காங்கிரசால் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி கொண்டும் வருகின்றனர்.

Tags :