தேசிய செயலாளர் பொறுப்பும் இல்லை... கவர்னர் ஆகிறாரா ஹெச்.ராஜா
By: Nagaraj Sat, 26 Sept 2020 9:35:20 PM
கவர்னர் ஆகிறாரா?... பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஹெச். ராஜா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கவர்னர் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜவின் தேசிய நிர்வாகிகள் புதிய பட்டியல் வெளியானது. அந்த பட்டியலில் ஹெச். ராஜா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் தேசிய அளவில் பொறுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில ஆண்டுகளாக பாஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்த ஹெச். ராஜாவுக்கு மீண்டும் அதே பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென அந்த பதவிக்கு ஹெச். ராஜாவை பாஜக மேலிடம் தேர்வு செய்யாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக ஹெச். ராஜா நியமனம் செய்யப்படுவர் என்று
கூறப்பட்ட நிலையில் திடீரென எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து தற்போது ஹெச்.ராஜாவுக்கு இருந்த தேசிய செயலாளர் பதவியும்
பறிபோய் உள்ளதால் அவர் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக
கருதப்படுகிறது
இருப்பினும் ஒரு தரப்பினர் தமிழிசை சௌந்தரராஜன்
போலவே ஹெச். ராஜாவுக்கு கவர்னர் பதவி அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் கட்சியில் பதவி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.