Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் - பிரதமர் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் - பிரதமர் அறிவிப்பு

By: Karunakaran Sat, 14 Nov 2020 5:16:05 PM

பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் - பிரதமர் அறிவிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது. தற்போது, பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

france,curfew,corona virus,france pm ,பிரான்ஸ், ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ், பிரான்ஸ் பி.எம்

மேலும் அவர், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்து உள்ளார். இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவ தொடங்கியதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

Tags :
|
|