Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

By: Nagaraj Tue, 12 May 2020 6:29:48 PM

ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 3-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
இந்த சூழலில், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசும் அறிவித்தது.


tenth grade,june month,exam,minister,students ,பத்தாம் வகுப்பு, ஜுன் மாதம், தேர்வு, அமைச்சர், மாணவர்கள்

இந்தநிலையில், கேள்வி குறியாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், ஜூன் 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 1 மாணவர்களின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான பேருந்து வசதி செய்து தரப்படும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் கூறினார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags :
|