Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது: ஸ்வீடனை இணைக்க துருக்கி ஆதரவு

நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது: ஸ்வீடனை இணைக்க துருக்கி ஆதரவு

By: Nagaraj Tue, 11 July 2023 11:36:26 AM

நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது: ஸ்வீடனை இணைக்க துருக்கி ஆதரவு

லித்துவேனியா: நேட்டோ உச்சி மாநாடு தொடக்கம்... லித்துவேனியா தலைநகரான வில்னிசில் 2 நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 31 நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்த உள்ளன.

sweden,talks,turkey,support,offers,nato ,ஸ்வீடன், பேச்சு வார்த்தை, துருக்கி, ஆதரவு, முன்வந்துள்ளது, நேட்டோ

ரஷ்யாவுடனான யுத்தம் முடிவுக்கு வந்ததும் நேட்டோவில் உக்ரைன் இணையலாம் என்ற அறிவிப்பை எதிர்பார்ப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பதற்கு துருக்கி ஆதரவை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாகவே குர்தீஷ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக கூறி நேட்டோவில் இணைய விடாமல் ஸ்வீடனுக்கு துருக்கி முட்டுக்கட்டை போட்டு வந்தது. துருக்கியின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து ஸ்வீடனை ஆதரிக்க துருக்கி முன்வந்துள்ளது.

Tags :
|
|
|
|