Advertisement

முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் இயற்கை குறிப்புகள்!!

By: Monisha Wed, 04 Nov 2020 2:57:01 PM

முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் இயற்கை குறிப்புகள்!!

பலர் எதிர்கொள்ளும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் சருமத்தில் வெடிப்பு ஏற்படும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக முகத்தை ஸ்க்ரப் உபயோகித்து சுத்தம் செய்தே ஆக வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்வு செய்து முகத்தைக் கழுவி முகத்தில் சேர்ந்துள்ள இறந்த சரும செல்களை நீக்க வேண்டும்.

face,beauty,skin,mistletoe,lemon ,முகம்,அழகு,சருமம்,வேப்பிலை,எலுமிச்சை

வேப்பிலை எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் சிறப்பான பொருள். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.

Tags :
|
|
|