Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் இம்ரான்கானை வைத்து பொம்மை ஆட்சி நடத்துகிறது - நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் இம்ரான்கானை வைத்து பொம்மை ஆட்சி நடத்துகிறது - நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

By: Karunakaran Sat, 17 Oct 2020 3:49:12 PM

பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் இம்ரான்கானை வைத்து பொம்மை ஆட்சி நடத்துகிறது - நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது ஜாமீனில் வெளிவந்து, சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தி உள்ளது. முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் செரீப், ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமரவைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

nawaz sharif,pakistan army,isi,imran khan ,நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., இம்ரான் கான்

மேலும் அவர், என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பும், ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும். என்னை நீங்கள் துரோகி என்று குற்றம்சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன். இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன என குற்றம் சாட்டினார்.

மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய நவாஸ் செரீப், அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை? ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்ஐ. இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது? என்று கூறினார்.

Tags :
|