Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இப்போ சுற்றுப்பயணம் தேவையா? ராகுல் நோக்கி பாயும் விமர்சனங்கள்

இப்போ சுற்றுப்பயணம் தேவையா? ராகுல் நோக்கி பாயும் விமர்சனங்கள்

By: Nagaraj Thu, 07 Sept 2023 06:57:15 AM

இப்போ சுற்றுப்பயணம் தேவையா? ராகுல் நோக்கி பாயும் விமர்சனங்கள்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒருவார கால சுற்றுப்பயணமாக ஐரோப்பா புறப்பட்டுச் சென்றார். ஜி.20 உச்சி மாநாடு நடக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, ஐரோப்பிய யூனியன் வழக்குரைர்கள், மாணவர்கள், ஐரோப்பா வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். செப். 9 ஆம் தேதி பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

abroad,review,g20 summit,rahul gandhi,travel ,வெளிநாடு, விமர்சனம், ஜி20 மாநாடு, ராகுல் காந்தி, பயணம்

பின்னர் பிரான்ஸிலிருந்து நார்வே செல்லும் ராகுல்காந்தி, அங்கு ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செப். 11 ஆம் தேதி புதுதில்லி திரும்புகிறார்.

ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதையொட்டி புதுதில்லியில் ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைவர்கள் கூட்டம் வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறும் சமயத்தில் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டே ராகுல் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags :
|
|