Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி கோரிக்கை

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி கோரிக்கை

By: Karunakaran Mon, 24 Aug 2020 5:45:40 PM

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், கல்லூரி இறுதியாண்டு மற்றும் பல முக்கிய தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

neet,postponed,jee exams,mamata banerjee ,நீட், ஒத்திவைப்பு, ஜேஇஇ தேர்வுகள், மம்தா பானர்ஜி

கொரோனா அதிகமாக பரவி வரும் இந்த சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மத்திய அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரவல் நேரத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது நமது கடமை என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|