Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

By: vaithegi Thu, 04 May 2023 09:59:30 AM

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

இந்தியா: மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ம் ந தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7 -ஆம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

hall ticket,neet exam ,ஹால் டிக்கெட், நீட் தேர்வு

இந்த நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

Tags :