Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • NEET SS நுழைவுத்தேர்விற்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியீடு

NEET SS நுழைவுத்தேர்விற்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியீடு

By: vaithegi Wed, 25 Oct 2023 2:17:50 PM

NEET SS நுழைவுத்தேர்விற்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியீடு

சென்னை: மருத்துவ அறிவியலுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS) நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் 29 மற்றும் 30 -ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று DM/MCh/DrNB சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேர தேர்வான மாணவர்களுக்கு மதிப்பெண் அட்டை வெளியாகி விடும்.

அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான கவுன்சிலிங் பற்றிய அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

neet ss entrance test,score ,NEET SS நுழைவுத்தேர்வு ,மதிப்பெண்


இதையடுத்து தற்போது எப்படி மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், NBEMS ன் அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in என்கிற பக்கத்திற்கு சென்று NEET SS 2023 மதிப்பெண் அட்டை இணைப்பு என்கிற பகுதியை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர், NEET SS உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி உள்ளே சென்றால் நுழைவு மதிப்பெண் அட்டை காண்பிக்கப்படும். அதை, மாணவர்கள் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags :