Advertisement

நீட் யூஜி 2024 பாடத்திட்டம் தற்போது வெளியீடு

By: vaithegi Sun, 08 Oct 2023 2:28:43 PM

நீட் யூஜி 2024 பாடத்திட்டம் தற்போது வெளியீடு

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை பாடத்திட்டத்தை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.இதையடுத்து இந்த பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் இறுதி செய்துவுள்ளது.

எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு இந்தியாவில் நடத்தப்படும் ஒரே நுழைவுத் தேர்வு நீட் தேர்வு.இத்தேர்வுக்கு தமிழகத்தில் பலமுறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் வருடம் தோறும் இந்த தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது.

need ug,exam ,நீட் யூஜி,தேர்வு


அதே போன்று 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுகள் மே 5ம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்ப பதிவு தேதிகள் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் என் எம் சி புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் அதுமட்டுமல்லாமல் இந்த 2024-ம் ஆண்டு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துமா? அல்லது தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா? என்று பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளது. இதையடுத்து இது குறித்த அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :