Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை

By: Karunakaran Tue, 10 Nov 2020 09:11:00 AM

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை இந்தியாவின் உள்நாட்டு மருந்து நிறுவனங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்கவும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷியா உருவாக்கி உள்ள ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளது. பதிவுக்கு பிந்தைய பரிசோதனை நடவடிக்கைகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இந்த தடுப்பூசியை இந்தியா, தென்கொரியா, பிரேசில், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் தயாரிக்க ரஷியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கவும் ரஷியா முயன்று வருகிறது.

negotiations,russian vaccine,corona virus,india ,பேச்சுவார்த்தை, ரஷ்ய தடுப்பூசி, கொரோனா வைரஸ், இந்தியா


இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் ரஷியா சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் 4 முன்னணி மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டு உள்ளது. அதில் இந்த தடுப்பூசியின் தயாரிப்பு, பரிசோதனைகளின் முன்னேற்றம், பல்வேறு நாடுகளில் வெகுஜன தடுப்பூசி திட்டம், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் அனுபவ பகிர்வு, தடுப்பூசி குறித்த முக்கியமான அறிவிப்புகள், மருத்துவ நிபுணர்களின் விளக்கம் போன்றவை இடம்பெறும் என டெல்லியில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்து உள்ளது.

Tags :