Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை

By: Karunakaran Sat, 12 Dec 2020 1:06:18 PM

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தீர்வு காண இருப்பதாகவும் கூறினார். இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சரி, பேச்சுவார்த்தை நடக்காவிட்டாலும் சரி, ஜனவரி 1ம் தேதி முதல் சில மாற்றங்கள் நடக்கும்.

negotiations,future trade agreement,european union,brexit ,பேச்சுவார்த்தைகள், எதிர்கால வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம், பிரெக்சிட்

ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கான பயண விதிகளில் ஜனவரி 1 முதல் மாற்றம் இருக்கும் என்று அரசு எச்சரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் திட்டமிட்ட பயணங்களுக்கு, பாஸ்போர்ட்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்திலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய பகுதிக்கு வரும் பிரிட்டன் மக்களும் நாடு திரும்புவதற்கான டிக்கெட் அல்லது அடுத்த பயணத்திற்கான டிக்கெட்டைக் காட்ட வேண்டும். அவர்கள் தங்குவதற்கு போதுமான பணம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பிரெக்சிட் காலக்கெடு முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் பிரிட்டன் மக்களுக்கு பொருந்தாது. ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :