Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையிலிருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை

எல்லையிலிருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை

By: Nagaraj Fri, 18 Dec 2020 10:42:43 PM

எல்லையிலிருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை

மீண்டும் பேச்சுவார்த்தை... லடாக் எல்லையிலிருந்து சீனாவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லையை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முயன்றதால் கடந்த ஜூன் மாதம் இரு படைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணிக்க சீனாவும், இந்தியாவும் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தற்போது நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

negotiation again,forces,important,reciprocity,progress ,மீண்டும் பேச்சுவார்த்தை, படைகள், முக்கியம், பரஸ்பரம், முன்னேற்றம்

இந்த நிலையில் இன்று (டிச., 18) எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தின் கீழ் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக செப்., 30 அன்று இக்கூட்டம் நடைபெற்றது. அதில் துருப்புகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ஆன்லைன் மூலம் நடந்த கூட்டத்திலும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு வேண்டும்.

அதற்கு பிரச்னைக்குரிய பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது முக்கியம் என வலியுறுத்தப்பட்டது.

Tags :
|