Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிய நிலையில் இன்று பேச்சுவார்த்தை தொடக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிய நிலையில் இன்று பேச்சுவார்த்தை தொடக்கம்

By: vaithegi Thu, 20 Oct 2022 09:50:06 AM

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிய நிலையில் இன்று பேச்சுவார்த்தை தொடக்கம்

சென்னை: இன்று பேச்சுவார்த்தை தொடக்கம் .... கடந்த சில காலமாகவே தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை அதிகரித்தியுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்நிலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

negotiation,purchase price of milk ,பேச்சுவார்த்தை ,பால் கொள்முதல் விலை

இந்த நிலையில் இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வருகிற 26ம் தேதிக்குள் பேச்சுவார்த்தையில் தீர்வு காணா விட்டால், 28ம் தேதி பால் வழங்காமல் போராட்டம் நடத்த போவதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அதேசமயம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால் ஆவின் பாலின் விலையும் அதிகரிக்கலாம் என மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிகிறது.

Tags :