Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு அண்டை நாடான நேபாளம் தனது வாழ்த்துகளை தெரிவிப்பு

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு அண்டை நாடான நேபாளம் தனது வாழ்த்துகளை தெரிவிப்பு

By: vaithegi Mon, 15 Aug 2022 11:42:00 AM

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு அண்டை நாடான நேபாளம் தனது வாழ்த்துகளை தெரிவிப்பு

நேபாளம் : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் மிகவும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள அரசு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது.

நேபாள வெளிவிவகார மந்திரி டாக்டர் நாராயண் காத்கா, இந்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு, நேபாளம் சார்பில் இந்தியாவின் 76-வது சுதந்திர தின மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

இதை நேபாள வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இதற்கு முன் இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட செய்தியில், ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்டு 15-ந்தேதி அன்று 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

greetings,nepal ,நேபாளம் ,வாழ்த்து

மேலும் காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை போன்றவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் என கூறியதுடன், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

Tags :