Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடும் நேபாள அரசு!

இந்தியாவின் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடும் நேபாள அரசு!

By: Monisha Wed, 20 May 2020 3:42:45 PM

இந்தியாவின் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடும் நேபாள அரசு!

நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வரைபடத்தில் புதிதாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகளான லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை சேர்த்துள்ளது நேபாள அரசு.

இந்தியா, சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை தொடங்கி உள்ளது. அதனை தொடங்கி 10 நாட்களுக்குப் பின்னர் நேபாள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டும் வருகிறது.

india,government of nepal,manasarovar region,tibet,uttarakhand ,இந்தியா,நேபாள அரசு,மானசரோவர் பகுதி,திபெத்,உத்தராகண்ட்

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நேபாள பிரதமர் ஒலி, “ராஜ்ய ரீதியில் அந்தப்பகுதிகளை மீண்டும் பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இந்தப்பிரச்சினை ஓயும் வரை மங்கிப்போகாது. இந்த விவகாரத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அந்தப்பகுதிகளை மீட்போம்” என்றார்.

Tags :
|
|