Advertisement

நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியீடு

By: vaithegi Thu, 07 Sept 2023 12:05:33 PM

நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியீடு

சென்னை: நெட் தேர்வு சான்றிதழ் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது .... தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜூன் பருவத்துக்கான நெட் தேர்வு ஜூன் 13 முதல் 22-ம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 4.62 லட்சம் பேர் எழுதினர்.

இதனை அடுத்து இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ ஜூலை 24-ம் தேதி வெளியிட்டது.
தேர்வு எழுதியவர்களில் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

net exam,marks certificate ,நெட் தேர்வு , மதிப்பெண் சான்றிதழ்


இதையடுத்து இவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags :