Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதியவரை மணந்த பெண்ணை தொடர்ந்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

முதியவரை மணந்த பெண்ணை தொடர்ந்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

By: Nagaraj Tue, 10 Nov 2020 09:09:06 AM

முதியவரை மணந்த பெண்ணை தொடர்ந்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

முதியவரை மணந்த பெண்ணை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 70 வயது முதியவர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் மற்றும் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக, பலரும் அந்த பெண்ணை கடுமையாக திட்டி வந்தனர். மேலும், இவ்வளவு அழகான பெண் அந்த 70 வயது முதியவரையா? திருமணம் செய்வது எனவும், இதற்கு பணம்தான் காரணம், பணத்திற்க்காக இப்படியா செய்வது என பலரும் அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

இந்த பேச்சுக்களை கேட்டு ஒருகட்டத்தில் அந்த பெண் இணையத்தில் தான் பதிவிட்ட புகைப்படங்களை எல்லாம் நீக்க தொடங்கினார்.

china,young woman,old man,marriage,critique ,சீனா, இளம் பெண், முதியவர், திருமணம், விமர்சனம்

பின்னர், அந்த 70 வயது முதியவரை தான் ஏன் திருமணம் செய்துகொண்டேன் என அந்த பெண் தற்போது விளக்கமளித்துள்ளார்.

அதில், எனது கணவரின் வாழ்க்கையில் எல்லாமே நான் தான், அதாவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உயிரே நானாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். அவரின் அளவுகடந்த பாசத்தை பார்த்துதான் தான் அவரை திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

ஆனாலும், அந்த பெண் கூறியதை கேட்டும் நெட்டிசன்கள் அதை நம்புவதாக இல்லை என விமர்சனத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Tags :
|