Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

By: Monisha Mon, 30 Nov 2020 10:11:43 AM

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

bay of bengal,barometric pressure,sea,fishermen,warning ,வங்கக்கடல்,காற்றழுத்தம்,கடல்சீற்றம்,மீனவர்கள்,எச்சரிக்கை

மேலும் விசைப்படகு மீனவர்கள் யாரேனும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனே கரைக்கு திரும்பவும் மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் வேகமாக கரைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|