Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 நாட்களில் புதிதாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 3 நாட்களில் புதிதாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

By: Monisha Wed, 25 Nov 2020 09:30:17 AM

அடுத்த 3 நாட்களில் புதிதாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்க கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. அது தற்போது அதி தீவிர புயலாக இன்று மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி இடையே கரையை கடக்க இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி வரை மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

bay of bengal,low pressure area,storm,weather ,வங்க கடல்,காற்றழுத்த தாழ்வு பகுதி,புயல்,வானிலை

இந்த நிலையில் புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் தாய்லாந்து வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலையை பொறுத்து அடுத்தகட்டமாக புயலாக மாறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|