Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்டில் அடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிப்பு

உத்தரகாண்டில் அடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிப்பு

By: vaithegi Sat, 09 July 2022 4:13:31 PM

உத்தரகாண்டில்  அடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிப்பு

உத்தரகாண்ட்: இந்தியாவில் மாநில வாரியாக ரேஷன் திட்டம் மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன. மத்திய அரசின் உதவியும் இதனால் கிடைக்கிறது. மேலும் தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் உதவி வழங்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. அதே நேரம் நல்ல வசதி படைத்தவர்களும் ரேஷன் திட்டம் மூலமாக உதவி பெறுகின்றனர். அவர்கள் ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனால் உண்மையாகவே உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இதனால் உத்தரகாண்டில் தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை கடந்த மே 5ஆம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தது.

ration cards,uttarakhand ,ரேஷன் கார்டுகள்,உத்தரகாண்ட்

மேலும் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவின் பேரில், மொத்தம் 91 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துள்ளனர்.

இதன்படி மாநிலம் முழுவதும் இதுவரை 91 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துள்ளன. மேலும் மாநிலத்தில் ரேஷன் கார்டுகள் அதிகமான அளவில் தயாரிக்கப்பட்டு தகுதியுடையவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என உணவு வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா கூறியுள்ளார் .
மாநிலத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளதால் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்படுகிறது. விரைவில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :