Advertisement

தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் புதிய மாற்றம்

By: vaithegi Sun, 19 Nov 2023 4:37:39 PM

தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் புதிய மாற்றம்

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் புதிய ஸ்மார்ட் மின்மீட்டர்கள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தாழ்வழுத்த பிரிவில் இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு உச்ச நேர மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ளது.

electricity bill,factory ,மின் கட்டணம்,தொழிற்சாலை


அதாவது, இந்த அறிவிப்பு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் வரைக்கும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில், சூரியசக்தி மின் நிலையத்திற்கான நெட்ஒர்க் சார்ஜ் கட்டணம் யூனிட் ரூ.1.53லிருந்து 76 காசாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான, செலவினங்களுக்காக ரூ. 76.62 கோடி ஒதுக்கீடு வழங்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேண்டுகோள் ஒன்றை விடுத்து உள்ளது.

Tags :