Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் மீண்டும் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் மீண்டும் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னை வானிலை ஆய்வு மையம்

By: Monisha Fri, 27 Nov 2020 12:59:45 PM

வங்கக்கடலில் மீண்டும் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் மீண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

bay of bengal,air depression,tamil nadu,rain,chance ,வங்கக்கடல்,காற்றழுத்தம்,தமிழகம்,மழை,வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகர்ந்து வரும். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags :
|